作曲:S.A. Rajkumar
ஹ்ம்ம் ம்ம்ம்
ஆஹா ஆஆ ஆஆ ஓ
ஹோ ஓஓ ஓஹோ
ஓஹோ ஹோ
காத்தா நாத்தா
நாம ஒன்னு சேந்த மண்ணுல
இப்போ வெள்ள காடா
பூவா பூவா நாம பூத்திருந்த
பூமியும் எல்லாம் தரிசல் மேடா
வித நெல்லு கொட்டும்
எங்க பத்தாயத்துல
ஆச கொட்டி வெச்சேன்
தெனம் உன் நெனப்புல
அது இப்போது காணவில்ல ஆஆ
காத்தா நாத்தா
நாம ஒன்னு சேந்த மண்ணுல
இப்போ வெள்ள காடா
பூவா பூவா நாம பூத்திருந்த
பூமியும் எல்லாம் தரிசல் மேடா
தனானனா நனன்னனா தனானனா நனன்னனா
கண்ணுக்கு மை வச்சேன்
கை விரல் வேணான்னு
ஊசிய கொண்டு வந்து
தீட்ட சொன்னாங்க
கூந்தலில் பூ வெச்சேன்
உன் சொந்தம் வேணான்னு
தீ பந்தம் கொண்டு வந்து
சூட்ட சொன்னாங்க
உனக்கு தான் நானாகணும்
இல்லையின்னா மண்ணாகனும்
மனசு என்ன மா விளக்காயா
ரெண்டா ஒடச்சு தள்ள
நெஞ்ச வலிச்சதென்ன
காத்தா நாத்தா
நாம ஒன்னு சேந்த மண்ணுல
இப்போ வெள்ள காடா
பூவா பூவா நாம பூத்திருந்த பூமியும்
எல்லாம் தரிசல் மேடா
நஞ்சையில் மொளச்ச
கடலைய ஒடச்சு
ஒன்னு நீ ஒன்னு நானு
சொல்லி திரிஞ்சேன்
ஆத்துக்கு பக்கத்தில்
அய்யனார் சிலைக்கு
பின்னாலே மாமன் மடி
சாஞ்சு கிடந்தேன்
ஆசதான் என் நெஞ்சில
ஆறு கலந்தான் என் கண்ணுல
உசுர மறந்து போகுற போது
நீதான் சொமக்க வேணும்
அந்த வரமும்வேணும்
காத்தா நாத்தா
நாம ஒன்னு சேந்த மண்ணுல
இப்போ வெள்ள காடா
பூவா பூவா நாம பூத்திருந்த
பூமியும் எல்லாம் தரிசல் மேடா
வித நெல்லு கொட்டும்
எங்க பத்தாயத்துல
ஆச கொட்டி வெச்சேன்
தெனம் உன் நெனப்புல
அது இப்போது காணவில்ல ஆஆ
காத்தா நாத்தா
நாம ஒன்னு சேந்த மண்ணுல
இப்போ வெள்ள காடா
பூவா பூவா நாம பூத்திருந்த
பூமியும் எல்லாம் தரிசல் மேடா