作曲:S.A. Rajkumar
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல
மீனாட்சி சுந்தரேசா
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல
மீனாட்சி சுந்தரேசா
வில்லேஜில் போயி கல்யாணம் பாரு
மீனாட்சி சுந்தரேசா
வாங்க வாங்க என்று சொல்லணும்
சொல்லி சொல்லி வாயும் வலிக்கணும்
வந்தவங்க வயிறு நிறையனும்
வாழ்த்து சொல்லி நெஞ்சும் நிறையனும்
ஒருநாள் கூத்து என்றுதான்
இந்த கல்யாணத்த உனக்கு யாரு சொன்னது
திருநாள் பத்து என்றுதான்
இந்த கல்யாணத்த திருக்குறள் நேற்று சொன்னது
ஏ சுந்தரேசா
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல
மீனாட்சி சுந்தரேசா ஹே
வானவில்ல கொண்டு வந்து
வளைச்சு கட்டி பந்தல் போடு
விண்மீன் எல்லாம் கொட்டி வந்து
சீரியல் பல்பா மாத்தி போடு
ஆகாயம் பார்த்து சூரியன் கேட்டு
ஆரத்தி தட்டாய் எடு
வந்தோருக்கெல்லாம் முத்துக்கள் அள்ளி
அட்சத பூவா போடு
உள்ள சொந்தம் எல்லாம் சேர்ந்து வந்து
திருமணத்த நடத்துறப்போ
அடடா ஆட்டம் பாட்டம்தான்
அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம்தான்
அடடா ஆட்டம் பாட்டம்தான்
அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம்தான்
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல
மீனாட்சி சுந்தரேசா
நம்ம வில்லேஜில் போயி கல்யாணம் பாரு
மீனாட்சி சுந்தரேசா
வெள்ளிக்காசு அள்ளித் தந்தா
பந்தல் போட ஆள் கிடைக்கும்
நேரில் சென்று கூப்பிட்டாத்தான்
பந்தல் உள்ள ஆள் இருக்கும்
அட்வான்சு தந்தா அழகான காரு
ஊர்வலம் போக வரும்
அன்புள்ளம் கொண்ட சொந்தங்கள்தானே
காரோட கூட வரும்
பல ராப்பகலா கண்முழிச்சு
மேளசத்தம் கேக்குறப்போ
அடடா ஆட்டம் பாட்டம்தான்
அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம்தான்
அடடா ஆட்டம் பாட்டம்தான்
அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம்தான்
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல
மீனாட்சி சுந்தரேசா
வில்லேஜில் போயி கல்யாணம் பாரு
மீனாட்சி சுந்தரேசா
வாங்க வாங்க என்று சொல்லணும்
சொல்லி சொல்லி வாயும் வலிக்கணும்
வந்தவங்க வயிறு நிறையனும்
வாழ்த்து சொல்லி நெஞ்சும் நிறையனும்
ஒருநாள் கூத்து என்றுதான்
இந்த கல்யாணத்த உனக்கு யாரு சொன்னது
திருநாள் பத்து என்றுதான்
இந்த கல்யாணத்த திருக்குறள் நேற்று சொன்னது
ஏ சுந்தரேசா